Published : 07 Feb 2018 09:53 AM
Last Updated : 07 Feb 2018 09:53 AM

தமிழகத்தில் மீத்தேன் எடுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

மக்களவையில் அறிவித்ததுடன் நிறுத்திவிடாமல், தமிழகத்தில் மீத்தேன் எடுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நேற்று 264 -வது நாளாக ஓஎன்ஜிசி நிறுவனத்தை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

கதிராமங்கலத்தை பொறுத்தவரை இங்கு அபாயம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் காஸ் ஆகியவற்றை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். இந்த தகவல் அப்பட்டமான பொய்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட, காவிரிப்படுகையில் 5 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் பல்வேறு எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் ங்களுக்கு தேவையான நிலத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

ஷேல் காஸ், மீத்தேன் ஆகியவற்றை எடுக்கும் திட்டத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் இந்த திட்டங்கள் செயல்படுத்தவில்லை எனக் கூறி வருகிறார்கள். திட்டங்களை செயல்படுத்தவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், வெறும் வார்த்தையில் திட்டங்களை செயல்படுத்தவில்லை எனக் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

இதேபோல, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அங்குள்ள மக்களுடைய விருப்பத்துக்கு எதிராக செயல்படுத்த மாட்டோம் என தெரிவித்தனர். ஆனால், இத்திட்டம் தொடர்பாக 27.2.2017 அன்று கர்நாடக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தனர். மத்திய அரசு சொல்வது ஒன்று, செய்வது வேறாக உள்ளது. ல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பல அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதை செயல்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x