Published : 08 Feb 2018 07:58 am

Updated : 08 Feb 2018 09:49 am

 

Published : 08 Feb 2018 07:58 AM
Last Updated : 08 Feb 2018 09:49 AM

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள் 12-ம் தேதி பேரணி

12

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 12-ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி இடதுசாரி கட்சிகள் பேரணி நடத்தவுள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல். லிபரேசன்) மாநிலச் செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்.யு.சி.ஐ. (சி) மாநிலச் செயலாளர் ஆர்.ரங்கசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

விலையேற்றம், வறட்சி, வேலையின்மைப் பிரச்சினைகளால் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் தாங்க முடியாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 3 ஆயிரத்து 600 கோடி கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதிலிருந்தே, இது ஏழைகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள், பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்,

போக்குவரத்துக் கழகங்களின் இழப்பை ஈடு செய்ய அரசே நிதி ஒதுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியும், வாய்ப்புள்ள மற்ற இடங்களில் மறியல் போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author