

கடலூர்: சிதம்பரம் நாட்டியஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் சம்பந்தம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சிதம்பரத்தில் வரும் 8-ம் தேதி43-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கி, 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, நாடகம், கதக், குச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நடப்பாண்டு புதிய முயற்சியாக நடராஜர் மீது பல்வேறுமொழிகளில் இயற்றப்பட்ட பாடல்தொகுப்பை வெளியிட உள்ளோம். புதுச்சேரி பி.எம்.சுந்தரம்,தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் பாடல்களை இயற்றி, அதற்கு இசையமைத்து உருவாக்கிய ஆடல்வல்லான் `பன்மொழிப் பண்ணிசை பாமாலை 7 மொழிகள்பாடல்' என்ற குறுந்தகடு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.