பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
Updated on
1 min read

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 15 நாட்களுக்கு பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

உலக மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னை மாநகரில் அமைந்துள்ள அதன் 18-க்கும் மேற்பட்ட கிளைகள் அனைத்திலும், அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்துகிறது.

கருத்தரிப்பால் தூண்டப்படும் உயர் ரத்த அழுத்தம், மெனோபாஸ் மற்றும் மெனோபாஸுக்கு முந்தைய நிலை காரணமாக ஏற்படும் பார்வைத்திறன் ஆரோக்கிய பிரச்சினைகள் உட்பட பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் கண் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கான அடிப்படை ஸ்கிரீனிங் சோதனைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை இம்மருத்துவமனை செய்திருக்கிறது.

இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்பதற்கான பதிவை செய்வதற்கு 9594924048 என்ற எண்ணை அழைக்கலாம் என்று மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மருத்துவர் எஸ்.சவுந்தரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in