Published : 04 Mar 2024 06:15 AM
Last Updated : 04 Mar 2024 06:15 AM
சென்னை: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) சார்பில், 2023-24-ம் ஆண்டுக்கான எஸ்சி, எஸ்டி நலத்திட்டத்தின்கீழ் ரூ.29.91 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஓஎன்ஜிசி அகில இந்திய எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் நல சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற்றது.ஓஎன்ஜிசி காவிரி படுகை மேலாளர் சாந்தனு முகர்ஜி சிறப்புவிருந்தினராக பங்கேற்று, பயனாளிகளுக்கு 45 தையல் இயந்திரங்கள், 3 சரக்கு ரிக்ஷாக்கள், 9 நான்குசக்கர வாகனங்கள், 24 மாவு அரைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி அகில இந்திய எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச் சங்கத்தின் தலைவர் பி.ஆறுமுகம்,செயலாளர் கவுதம் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT