Published : 03 Mar 2024 04:08 AM
Last Updated : 03 Mar 2024 04:08 AM

திமுக கூட்டணிக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் ஆதரவு

கோவை: தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்க மாநில பொதுக்குழு கூட்டம், கோவை சாயிபாபா காலனியில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் முகமது ரபி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், தமிழகம் - புதுவையில் 40 தொகுதியிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டில் 1,300-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தி, ரூ.5,580 கோடி மதிப்புள்ள சுமார் 6,179 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டதற்கும், கோவையில் 20 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பார்க் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கும் தமிழக அரசுக்கு நன்றி.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ள பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல் சமய நல்லுறவு இயக்க 15-ம் ஆண்டு விழாவையொட்டி, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவதுடன், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், இணை பொதுச் செயலாளர் வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சமூக சேவை செய்து வரும் சகோதரி ஸ்டெல்லா பெலாசருக்கு அன்னை தெரசா விருது, மூத்த பத்திரிகையாளர் ரபீக் அகமதுவுக்கு அப்துல் கலாம் விருது, ப.பா.ரமணிக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. இவற்றை, ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி, மாநில தலைவர் முகமது ரபி ஆகியோர் வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x