

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்னும் ஒரு வாரத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்னும் ஒரு வாரத்தில் மேல் முறையீடு செய்யப்படும். அதில் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்" என்றார்.
அவர் மேலும் கூறும்போது, "கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்காது. தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் இருக்கின்றன. தமிழக முதல்வரும், துணைமுதல்வரும் கேட்டுக்கொண்டால் மாற்று வழிகளை நான் அவர்களுக்குத் தெரிவிப்பேன்.
வேட்பாளர்களிடம் பணம் வாங்காமல் தொண்டர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும்" என்றார்.