Published : 02 Mar 2024 05:58 AM
Last Updated : 02 Mar 2024 05:58 AM

இலங்கையில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர் பாக் நீரிணையை நீந்திக் கடந்து சாதனை

ராமேசுவரம்: இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் ஹரிகரன் தன்வந்த், தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான பாக் நீரிணையை 9 மணி 37 நிமிடத்தில் நீந்தி சாதனை படைத்தார்.

தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் கடல் பகுதியான பாக் ஜலசந்தி நீரிணை, ஆழம்குறைந்த, பாறைகள், ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிரம்பிய பகுதியாகும். தனிப்பட்ட முறையிலும், குழுவாகவும் சிலர் பாக். நீரிணையை நீந்திக் கடந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் ஹரிகரன் தன்வந்த் (12), இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறையின் அனுமதியைப் பெற்று, தலைமன்னாரில் இருந்து படகு மூலம்புறப்பட்டு, தனுஷ்கோடி அருகேயுள்ள மணல் தீடை பகுதிக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்தடைந்தார்.

9 மணி 37 நிமிடங்கள்.. நேற்று அதிகாலை தனுஷ்கோடி மணல் தீடை பகுதியிலிருந்து நீந்த ஆரம்பித்த ஹரிகரன் தன்வந்த், 9 மணி 37 நிமிடங்கள் நீந்தி தலைமன்னார் கடற்கரையை அடைந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்டோர் மாணவரை வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x