மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் 86.15 லட்சம் பேர் பயணம்

மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் 86.15 லட்சம் பேர் பயணம்
Updated on
1 min read

சென்னை: பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளதாகவும், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த ஜன.1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பிப்.1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மொத்தம் 86 லட்சத்து 15 ஆயிரத்து 8 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பிப்.9-ம் தேதி ஒரேநாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 786 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகளுக்கு க்யுஆர் குறியீடு, பயணச் சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்-அப் டிக்கெட், பேடிஎம் செயலி மற்றும் போன் பே போன்ற அனைத்து வகையாக பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in