

ஆவின் நிறுவனம் சார்பில் பால் கொள்முதல் செய்வது குறைந் துள்ளதால் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை அதிக மாக வழங்குவதால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பாலை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் ஆவின் நிறுவனத்துக்கு கிடைத்துக் கொண்டு இருந்த 25 லட்சம் லிட்டர் பால் கடந்த இரண்டு மாதங்களாக 21 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.
தனியார் பால் விலை அதிகமாக இருப்பதாலும், பொது மக்கள் விலை குறைவாக உள்ள ஆவின் பாலை அதிகமாக வாங்குவதாலும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் 21 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 3 ஆவின் பால் பதப்படுத்தும் மையங்கள் மூலம் நாள்தோறும் 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு விற் பனைக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது மற்ற நிறுவன பால் பாக்கெட்டுகளை விட ஆவின் பால் விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் தமிழகம் முழுவதும் பொது மக்கள் ஆவின் பாலை விரும்பி வாங்குகின்றனர்.
இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு இந்தத் தட்டுப்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.