Published : 01 Mar 2024 05:42 AM
Last Updated : 01 Mar 2024 05:42 AM
சென்னை: சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட 631 ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழில்துறை அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா தலைமையில் 17 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொழில் துறைசெயலர் வி.அருண்ராய் வெளியிட்ட அரசாணையில் கூறி யிருப்பதாவது:
சென்னையில் கடந்த ஜன.7, 8ஆகிய தேதிகளில் உலக முதலீட் டாளர்கள் மாநாடு மிகப்பெரிய நிகழ்வாக நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு விழாவில், முதல்வர்மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தொிழல்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும். அதில் தொழில்துறை அலுவலர்கள், வழிகாட்டி பிரிவு அலுவலர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அதைஒரு முழுமையான தொழிற்சாலையாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள்’’ என்று தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாதலைமையில் சிறப்புக் குழுஅமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் துணைத் தலைவராக தலைமைச் செயலரும், உறுப்பினர்களாக, வளர்ச்சி ஆணையர், தொழில், தகவல் தொழில்நுட்பம், நிதி, ஜவுளி, எரிசக்தி , குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், வீட்டுவசதி, வருவாய் ஆகிய துறைகளின் செயலர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர்,தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், நில நிர்வாகஆணையர், நகர மற்றும் ஊரமைப்பு திட்ட இயக்குநர், தொழில்வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் ஆகியோர் இருப்பார்கள். இதில் தொழில்துறை செயலர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.
இந்தக் குழுவினர், குறிப்பிட்ட கால இடைவெளியில், முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், அவற்றின் மேம்பாடு குறித்தும்கண்காணிப்பார்கள். ஒப்பந்தங் களை நிறைவேற்றுவதில் ஏதேனும்சிக்கல் உருவானால், இந்த குழுவினர் அதுகுறித்து ஆய்வு செய்து,தேவையான பரிந்துரைகளை வழங்குவார்கள். இதுதவிர, சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் தேவையான பரிந்துரைகள், உத்தரவு களை வழங்குவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT