

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களில் மதிமுக1996-ம் ஆண்டு முதல் போட்டியிட்டுவருகிறது. இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டுசட்டப்பேரவை தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீதம் பெற்றதாக கூறி எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதன்பிறகு, 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
எனவே, வரும் மக்களவை தேர்தலிலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளோம். பம்பரம் பொது சின்னம் இல்லை. அந்தசின்னத்தை வேறு எந்த கட்சியும் கோரவில்லை என்பதால் எங்கள்கட்சிக்கே பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.