Published : 01 Mar 2024 04:02 AM
Last Updated : 01 Mar 2024 04:02 AM
விழுப்புரம்: கண்டமங்கலம் ரயில்வே கிராசிங் கில் உயர்மட்ட மேம்பால பணி கள் நடைபெற்று வருவதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று முதல் தடை விதித்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரையிலான 194 கி.மீ தூரத்துக்கு ரூ.6,500 கோடி செலவில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற் றும் பணிகள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியிலிருந்து கெங்கராம் பாளையம், மதகடிப் பட்டு, வில்லியனூர் வரையில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் அளவுக்கு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கண்டமங்கலத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிதொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளுக்காக அந்த பகுதியில் நேற்று முதல் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு விழுப்புரம் - புதுச்சேரி இடையி லான தேசிய நெடுஞ்சாலை 3 மாதங்களுக்கு மூடப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவண்டார் கோவில் வரை சென்று அங்கிருந்து கொத்தம் புரிநத்தம், வணத்தாம் பாளையம், சின்ன பாபு சமுத்திரம், கெண்டியாங்குப்பம், அரியூர் வழியாக வில்லியனூர், புதுச்சேரி சென்றடையும்.
அதேபோல் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அரியூர், சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு, பள்ளி நேளியனூர், திருபுவனை வழியாக விழுப்புரம் சென்றடைய அறிவுறுத் தப்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பாதை வழி கார ணமாக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கும் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிர மத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனியார் பேருந்துகள் தற் போது கூடுதலாக வசூலிக்கும் கட்டணத்தில் மேலும் ரூ.5 கூடுதல் கட்டணமாக வசூலிக்கவும் வாய்ப்புள்ளது. நேற்று முன்தினம் வரை அரசு பேருந்துகளில் ரூ.27, தனியார் பேருந் துகளில் ரூ.30 வசூலிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT