Published : 29 Feb 2024 07:00 AM
Last Updated : 29 Feb 2024 07:00 AM

பாஜக ஆட்சியை அகற்றும் 2-வது சுதந்திர போருக்கு மக்கள் தயார்: செல்வப்பெருந்தகை கருத்து

மத்திய பாஜக அரசைக் கண்டித்து கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்றது. படம்: ம.பிரபு

சென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: பாஜக சார்பில் 2013-ம்ஆண்டு நடந்த கடல் தாமரைமாநாட்டில் பங்கேற்ற சுஷ்மாஸ்வராஜ், ‘‘நாங்கள் ஆட்சிக்குவந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைப்போம். மீனவர்கள் பாதுகாப் புக்காக கடற்படையை எல்லையில் நிறுத்துவோம். படகுகள் பறிமுதல் செய்யப்படாது. மீனவர்களின் உயிருக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்போம்’’ என்றார்.

அப்படி கூறித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான மீனவர்கள் கொல்லப்பட் டனர். ஏராளமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பட்டியலின மக்களை ஏமாற்றுவதிலும், மீனவர்களை நசுக்குவதிலும் முதன்மையாக பாஜக உள்ளது. மக்கள் விரோதபாஜக ஆட்சியை தூக்கி எறியும் 2-வது சுதந்திர போராட்டத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் இறங்குகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு, அசன் மவுலானா எம்எல்ஏ, துணை தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x