சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட செல்லப்பிள்ளைக்குட்டை ஊராட்சி, மல்லகவுண்டனூர் பகுதி அருந்ததியர் மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று  பொதுக்கழிப்பிடத்தை பாமக எம்எல்ஏ அருள் திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட செல்லப்பிள்ளைக்குட்டை ஊராட்சி, மல்லகவுண்டனூர் பகுதி அருந்ததியர் மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று பொதுக்கழிப்பிடத்தை பாமக எம்எல்ஏ அருள் திறந்து வைத்தார்.

அருந்ததியர் மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று பொதுக் கழிப்பிடம் திறப்பு @ சேலம்

Published on

சேலம்: சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட செல்லப்பிள்ளைக்குட்டை ஊராட்சி, மல்லகவுண்டனூர் பகுதி அருந்ததியர் மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று பொதுக்கழிப்பிடம் திறப்பு விழா நடந்தது.

இவ்விழாவில் சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கலந்து கொண்டார். மேலும், முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, செல்லப் பிள்ளைக்குட்டை ஊராட்சியில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும் வகையில் ஸ்மார்ட் கிளாஸை எம்எல்ஏ அருள் தொடங்கி வைத்தார். செல்ல பிள்ளைக்குட்டை ஊராட்சி மல்ல கவுண்டனூர் அருந்ததியர் காலனி பகுதியில் கழிப்பிட வசதி இல்லாமல் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப் பட்டு வந்தனர்.

கழிப்பிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், எம்எல்ஏ அருளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, அவர் தனது சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.50 லட்சம் ஒதுக்கீடு செய்து, பொதுக் கழிப்பிடம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மேலும், செல்லப் பிள்ளைக் குட்டை ஊராட்சி, குப்பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முத்து நாயக்கன்பட்டி ஊராட்சி பாலகுட்டப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் பாகல்பட்டி ஊராட்சி பூமி நாயக்கன் பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை எம்எல்ஏ அருள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் ராஜா, ஊராட்சி துணைத்தலைவர் காயத்ரி சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in