

பல்லடம்: ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையால் அண்ணாமலைக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு திமுக, அதிமுக கட்சிகள் அதிர்ந்து போயின. பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அண்ணாமலை தேவை என்பதை உணர்ந்த பிரதமர் மோடி, கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினாலும் பரவாயில்லை என்ற முடிவை எடுத்தார். ‘தமிழகத்தில் எனது தளபதி அண்ணாமலை என்பதை அறிவிக்கும் வகையில்,மாதப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையின் தோளைத் தட்டிக் கொடுத்து, அவருக்கு தனது ஆதரவையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார்' என்கின்றனர் பாஜகவினர்.