இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | சோழிங்கநல்லூர் - சிறுசேரி பணி விரைவில் தொடங்கும்: அதிகாரிகள் தகவல்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | சோழிங்கநல்லூர் - சிறுசேரி பணி விரைவில் தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரிசிப்காட் வரையிலான 3-வது வழித் தடத்தில், சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை தடைபட்டிருந்த மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் 116.1 கி.மீ. தொலைவில்3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒன்று, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ.தொலைவை கொண்ட 3-வது வழித்தடம். இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை, பசுமை வழிச்சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுபோல, பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கிடையே, ஓஎம்ஆர்சாலையில் நேரு நகர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உயர்மட்டப்பாதை பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. இவற்றில், சோழிங்கநல்லூர் - சிறுசேரி வரை 10 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட பாதைக்கான பூர்வாங்க பணிகள்நிறைவடைந்து, அடுத்த கட்டப்பணிக்காக, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு வந்தன.

சோழிங்கநல்லூர் - சிறுசேரி சிப்காட் இடையே 9 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில்வழங்கப்பட்டது. இந்த நிறுவனம்,கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள துணை ஒப்பந்ததாரரைநியமித்தது. அவர்கள் பணியை தொடங்காததால், திட்டப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது, விரைவில் பணிகள்தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்தப் பகுதியில் ஒப்பந்ததாரர் கடந்த ஆண்டு பணியைத் தொடங்கினாலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆர்விஎன்எல் நியமித்த ஏஜென்சி அல்லது துணைஒப்பந்ததாரர் அதைச் செய்யவில்லை.

இதன் விளைவாக, ஏஜென்சியின் ஒப்பந்தத்தை நிறுத்தியது. மேலும், பணியை மேற்கொள்ள ஒரு புதிய நிறுவனத்தை அடையாளம் கண்டுள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். இந்த தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில்பயணிகள் கூறும்போது, சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை மெட்ரோ பணி நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழித்தடப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிறுசேரி சிப்காட்டுக்குள் சிறிய மெட்ரோ டிப்போவை அமைக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in