

மதுரை: சுகாதாரமற்ற குடிநீர், உணவால் மதுரையில் கடந்த சில நாட்களால் பலருக்கு ‘டைபாய்டு‘, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவு, குடிநீரால் இந்த நோய் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதித்தவர்கல் வருவது அதிகரித்துள்ளது. இதில் டைபாய், வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் அதிகமானோர் வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 வைரஸ் காய்ச்சல் பாதித்தோர், டைபாய்டு காய்ச்சலால் பாதித்தோர் வருகின்றனர். திருநகரை சேர்ந்த எஸ்.எஸ். சக்கரவர்த்தி கூறியதாவது: குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலும் எங்கள் பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. றுகையில், ‘‘குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. சூடு வைத்து குடித்தாலும் எங்கள் பகுதியில் வைரஸ் காய்ச்சல் அதிகம் வருகிறது. எங்க வீட்டிலே இந்த குடிநீரை குடித்த 2 பேருக்கு டைபாய்டு வந்துள்ளது. இதுபோல் நகரில் ஏராளமானோருக்கு டைபாய்டு வந்துள்ளது. ஆனால், டைபாய்டு பாதித்தவர்களை அதிகாரிகள் மறைக்கிறார்கள், ’’ என்றார்.
அரசு ராஜாஜி மருத்துவமனை பொது மருத்துவத் துறை தலைவர் பேராசிரியர் நடராஜன் கூறியதாவது: டைபாய்டு காய்ச்சல் பாதித்தவர் ஒன்றிரண்டு பேர்தான் வருகின்றனர். டைபாய்டு பாதிப்பை ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்துதான் உறுதி செய்ய முடியும். டைபாய்டு சுகாதார மற்ற உணவு, குடிநீரால் வருகிறது. சாலையோர உணவகங்கள், கடைகளில் தயாரிக்கப்படும் சுகாதாரமற்ற உணவு, தின்பண்டங்கள், குடிநீரால் தான் டைபாய்டு, தொற்று நோய் பரவுகிறது.
இந்த இரண்டையும் தவிர்த்து சுகாதாரமாக இருந்தால் நோய் வருவதை தவிர்த்து விடலாம். தும்மல், இருமல் பாதிப்பு உள்ளோர் இருமும்போது காற்றின் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. அதனால் காய்ச்சல், சளி தொந்தரவு உள்ளோர் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பழைய உணவை சூடு செய்து உட்கொள்ளக் கூடாது என்று கூறினார். மாநகராட்சி வார்டுகளில் தற்போது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, புதிய சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக சாலைகளை தோண்டும் போது கழிவுநீர் குழாய், குடிநீர் குழாய் உடைந்து கலக்கிறது. இதனால் வீடுகளுக்கு சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. இந்த குடிநீரை குடிப்பவர்களுக்கு டைபாய்டு போன்ற பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி முறையான நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.