

முறைகேடுகளில் ஈடுபடும் டாஸ்மாக் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்ற அரசின் உத்தரவால் பணியாளர்களை அச்சுறுத்த வழியேற்பட்டுள்ளது என்றும் இதில், முதல்வர் உடனே தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் டி.தன சேகரன், தலைவர் பெரியசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழக அரசே ஏற்று நடத்தும் மதுபானக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் விலையை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்க வழியேற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன்மூலம் சாதாரண மக்கள் மீது ரூ.3 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மதுப்பழக்கத்தால் ஏற்படும் இழப்புகளோடு, ஏழைக் குடும்பங்களை இந்த விலை உயர்வு மேலும் சீரழிக்கும்.
மதுபானக் கடைகளில் பணிபுரிந்து வரும் மேற்பார் வையாளர்கள், விற்பனை யாளர்கள், உதவி விற்பனையா ளர்கள் போன்ற பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பணியாளர் களுக்கு பணி வரன்முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மதுபானக் கடைகளில் நடைபெறும் சிறு தவறுகளைக் களைய வேண்டும் என்பதில் பணியாளர்கள் உறுதி யாக உள்ளனர். இதற்கு நடைமுறை ரீதியாக பயன ளிக்கும் விதிமுறை கண்டறியப் படவேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பணியாளர்களை அச்சுறுத்த வழியேற்பட்டுள்ளது. இது மோச மான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இப்பிரச்சினையில் முதல்வர் உடனே தலையிட்டு, பணியாளர் நலனைப் பாதுகாக்க வேண்டும்.
அண்மையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சொற்ப ஓய்வூதியம் பொருளற் றதாகும். நீண்டகாலமாக வலியுறுத் தப்பட்டு வரும் காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், பாது காப்பான பணிச்சூழல், அடிப் படை வசதிகள் உள்ளிட்ட கோரிக் கைகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.