கைவினைஞர்களை ஊக்கப்படுத்த மேலும் 3 புதிய விருதுகள்

கைவினைஞர்களை ஊக்கப்படுத்த மேலும் 3 புதிய விருதுகள்
Updated on
1 min read

கைவினைஞர்களை ஊக்கப்படுத் துவதற்காக மேலும் 3 புதிய விருதுகள் வழங்கப்படும் என்று ஊரகத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள் கிழமை நடந்த பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதில் அளித்து அமைச்சர் ப.மோகன் பேசியதாவது:

கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிப்பதற்காக, ‘கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி விருது’, ரூ.2.50 லட்சம் செலவில் ஆண்டு தோறும் இருவருக்கு வழங்கப்படும்.

ஒருங்கிணைந்து பணிபுரிந்து ஒரு பொருளைத் தயாரிக்கும் கைவினை ஞர்கள் அடங்கிய குழுவினரை கவுரவிக்கும் வகையில், ‘குழு உற்பத்தி விருது’ வழங்கப்படும். இந்த விருது, ஒவ்வொரு ஆண்டும் 3 குழுக்களுக்கு ரூ.3.75 லட்சத்தில் வழங்கப்படும்.

கலைப் படைப்புகளோடு பயன்பாடு சார்ந்த பொருட்களைத் தயாரிப்பதை ஊக்குவிப்பதற் காக, ‘பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருது’, ஆண்டுதோறும் 3 கைவினைஞர் களுக்கு ரூ.3.75 லட்சத்தில் வழங்கப்படும்.

பட்டு வளர்ச்சித் துறையில் அத்தியாவசிய பணியிடங்களான 150 இளநிலை ஆய்வாளர், 12 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப் படும். மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக அரசு பட்டுப் பண்ணைகளில் 30 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும். பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்கு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்.

பட்டு வளர்ப்பு விவசாயிகளை ஊக்கப்படுத்த, உயர்விளைச்சல் தரும் மல்பரி ரகங்களை நடவு செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ரங்கத்தில் 50 மகளிருக்கு காகிதக்கூழ் பொம்மைகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். ஈரோட்டில் ‘குருகுலம்’ முறையில் பஞ்சலோகச் சிற்பம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in