Published : 27 Feb 2024 06:06 AM
Last Updated : 27 Feb 2024 06:06 AM
சென்னை: சென்னை கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை துறைத் தலைவராக மருத்துவர் எஸ்.தீபா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.151.17 கோடியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்தை (மருத்துவமனை) பிரதமர் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
40 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உட்பட 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், 5 அறுவை சிகிச்சைஅரங்குகள், 20 கட்டண வார்டுகள்உள்ளன. டிவி, குளிர்சாதன வசதியுடன் கூடிய கட்டண அறைக்குஉணவுடன் சேர்த்து ரூ.900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட276 பணியாளர்கள் நியமனம்செய்யப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் இதயம், சிறுநீரகம்,மூளை, மனநலம், பார்வைத்திறன் குறைபாடு,உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் முதியவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவம் மட்டுமில்லாமல் முதுமையியல், முதியோர் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதியோர் மருத்துவத் துறை தலைவராக இருந்த மருத்துவர் எஸ்.தீபா, இந்த மருத்துவமனையின் முதியோர் மருத்துவத் துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரே மருத்துவமனையின் இயக்குநராகவும் நியமிக்கப்படவுள்ளார். ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் கட்டுப்பாட்டில் தேசிய முதியோர் நல மருத்துவமனை செயல்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT