

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பிப்ரவரி 26, 27-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிப்.28முதல் மார்ச் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் 26-ம் தேதி (இன்று) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.