Published : 25 Feb 2024 05:31 AM
Last Updated : 25 Feb 2024 05:31 AM

இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள்.

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு வெளிநாட்டுமீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ்,இலங்கை நீதிமன்றம் 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது. இதில், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை, படகு ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தைக் கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், சிறைப் பிடிக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள்கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நேற்று காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதில் மீனவர் சங்கத்தலைவர்கள் ஜேசு, எமரிட், சகாயம்மற்றும் மீனவர்கள், மீனவப் பெண்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்துக்கு ஆதரவாக, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, அகிலஇந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, காங்கிரஸ் மாவட்டப் பொறுப்பாளர் ராஜாராம் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x