

சிவகங்கை: சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்பி குறித்து அவதூறாக சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸார் போலீஸில் புகார் கொடுத்தனர்.
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தை காணவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிவகங்கை நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டினர். அதில் ‘கண்டா வரச் சொல்லுங்க அவரை கையோடு கூட்டி வாருங்கள்,’ ‘நெட் பிளிக்சில் படம் பார்த்து கொண்டும் தொகுதியை மறந்து சுற்றித் தெரியும் கார்த்தி சிதம்பரத்தை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் குறித்து அவதூறாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் சிவகங்கை நகர் போலீஸாரிடம் புகார் கொடுத் துள்ளனர்.