Published : 25 Feb 2024 06:52 AM
Last Updated : 25 Feb 2024 06:52 AM
திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத் துக்கு நிலம் கொடுக்க மறுத்து போராடும் விவசாயிகளுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான நிலையை உருவாக்கும் என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக்கேட்பு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யில் நடைபெற்றது. திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமை யிலான குழுவினர் பொதுமக் களிடம் கருத்துக்களை கேட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம், கனிமொழி கூறும்போது, “தமிழ கத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது கருத்தை கேட்டறிந்து மக்களின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, விவசாயிகள், வணி கர்கள், தொழில் முனைவோர், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது கருத்தை கேட்டு வருகிறோம். மாநில அரசுக்கு சில கோரிக்கைகளும், மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளை வலியுறுத்தி பெரும்பாலான கோரிக்கைகள் வந்துள்ளன. ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள், சிறு-குறு தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டியில் உள்ள குழப்பங்களை சரி செய்ய வேண்டும் என வலி யுறுத்தி உள்ளனர்.
தொகுதி பங்கீடு...: ரயில்வே திட்டங்களுக்கு வட மாநிலங்களில் அதிக நிதியை ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ கத்துக்கு குறைந்த நிதியை ஒதுக் குகிறது. தமிழகத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரி வித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை என்பது நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கை. அனைத்து தேர்தல்களிலும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாட்டை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய ஆட்சி அமையும். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விரைவில் முடியும்.
மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு நிலம் தர மறுத்து விவசாயிகள் போராடுகின்றனர். தொழிற்சாலை தொடங்கி வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் கூறுகின்றனர். இரண்டு தரப்பு மக்களும் உள்ளனர். வேளாண்மை சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் விவசாயிகள் போராடு கின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டத்தையும், மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து நடைபெறும் விவசாயி களின் போராட்டத்தை ஒப்பிட முடியாது. விவசாயிகளுடன் பேசி தமிழக அரசு சுமூகமான நிலையை உருவாக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT