‘யாரிடமும் பேசவுமில்லை; யாரும் அழைக்கவுமில்லை’ - கூட்டணி குறித்து தேமுதிக தகவல்

‘யாரிடமும் பேசவுமில்லை; யாரும் அழைக்கவுமில்லை’ - கூட்டணி குறித்து தேமுதிக தகவல்
Updated on
1 min read

மக்களவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக, பாஜக கட்சிகள் பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகின்றன.

தேமுதிகவை பொறுத்தவரை 10-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர் ப.பார்த்தசாரதி இந்திய தேர்தல் தலைமை ஆணையரிடம் தேர்தல் தொடர்பாக மனு அளித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘தேமுதிக சார்பில், தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை யாரிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களை இதுவரை யாரும் அழைக்கவில்லை’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in