பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்றது.படம்: ம.பிரபு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்றது.படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னைஎழும்பூரில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.சக்திவேல் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பணிபுரிந்துவரும் தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி மாத ஊதியமாக ரூ.20 ஆயிரமாவது வழங்க வேண்டும். அதேபோல தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஊதியத்தை வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக பெறுவதால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே நேரடியாக ஊராட்சிகள் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம், ஊராட்சிகளில் உள்ளதூய்மைப் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்க மாநில செயலாளர் கே.முருகேசன், பொருளாளர் செல்வராசு மற்றும் பல பெண் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in