Published : 22 Feb 2024 05:22 AM
Last Updated : 22 Feb 2024 05:22 AM

நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்காக ரூ.30,355 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடுகள்: பேரவையில் நிதி அமைச்சர் தாக்கல்

சென்னை: சட்டப்பேரவையில், 2023-24 நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றுதாக்கல் செய்து பேசியதாவது:

பேரவையில் வைக்கப்பட் டுள்ள இறுதிதுணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.30,355.32 கோடி நிதிஒதுக்கத்துக்கு வகை செய்கின்றன. இதில், ரூ.26,590.09 கோடி வருவாய்கணக்கிலும், ரூ.3,499.98 கோடி மூலதன கணக்கிலும், ரூ.265.25 கோடி கடன் கணக்கிலும் அடங்கும்.

சட்டப்பேரவையில் 2023-24-ம்ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் கடந்த 2023 அக்டோபர் 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள், புதிய துணை பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்களுக்கு பேரவையின் ஒப்புதலை பெறுவது இந்த துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கம்.

குறிப்பாக, எரிசக்தி துறை மானிய கோரிக்கையின்கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாகரூ.15,593.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு மானிய கோரிக்கையின்கீழ், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு ரொக்க நிவாரண உதவியாக ரூ.1,486.93 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத தொடர் மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கால் தென் மாவட்டங்களான நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரொக்கநிவாரண உதவியாக ரூ.541.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறப்புதிட்ட செயலாக்க துறையின்கீழ்கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்துக்கு கூடுதல் நிதியாக ரூ.1,055.34 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இறுதி துணை மதிப்பீடுகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கோரிய நிதி ஒதுக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x