Published : 22 Feb 2024 05:07 AM
Last Updated : 22 Feb 2024 05:07 AM

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்பட களம் அமைப்போம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி

சென்னை: தமிழகத்தில் அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டு காமராஜர் ஆட்சி ஏற்பட களம் அமைப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள் ளார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில்நேற்று நடைபெற்றது. இதையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனை அடைந்தசெல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய்குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள தலைவர்கள் அவரை வாழ்த்திப் பேசினார்.

கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான். கடந்த 70 ஆண்டுகளாக அவர்களிடம் நிறைய வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் குறைவாகவே செய்துஇருக்கிறோம். இன்று செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரை நான் மனமார வரவேற்கிறேன், வாழ்த்து கிறேன். நான் திருநாவுக்கரசரிட மிருந்து தலைவர் பதவியை பெற்றபோது மகிழ்ந்தேன். அதே மகிழ்ச்சியோடு இந்த பதவியை செல்வப்பெருந்தகைக்கு வழங்கு கிறேன்’’ என்றார்.

மேலிட பார்வையாளர் அஜோய் குமார் பேசும்போது, ‘‘பாஜக நாட்டை சீரழித்து வருகிறது. இந்தத் தேர்தலை சுதந்திரப் போராக கருதி, அனைவரும் செயலாற்ற வேண்டும். செல்வப்பெருந்தகை தலைமையில் 39 தொகுதிகளிலும் அதிமுக, பாஜகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து செல்வப் பெருந்தகை பேசியதாவது: இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. நாட்டை காப்பாற்ற ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். மல்லிகார்ஜூன கார்கேநம்பிக்கையோடு இந்த பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கிறார். இந்தநாட்டை காக்க முடியும் என்றால்அது காங்கிரசால் மட்டுமே முடியும்.அழகிரியின் பணி பாராட்டுக்குரி யது. அவர் எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். 18 எம்எல்ஏக்கள், 8 எம்பிக்களை பெற்றுத்தந்தார்.

காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்க மாட்டார்கள். அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டால் காமராஜர் ஆட்சி கொண்டுவர முடியும். அதற்கு எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும்ஒருநாள் நடந்தே தீரும். அதற்கான திட்டங்களை நாம் முன் னெடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட தலைவர் சிவ.ராஜ சேகரன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் சிரிவெல்லபிரசாத், பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர்அல்போன்ஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், கட்சியின் மாநில பொருளாளரர் ரூபி மனோகர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், மாவட்டதலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், அடையார் துரை, ரஞ்சன் குமார், முத்தழகன், டில்லி பாபு, அசன் மவுலானா எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மகளிர் அணி தலைவி சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x