வட சென்னை தொகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் அரசு: பாஜக

ஏ.என்.எஸ்.பிரசாத் | கோப்புப் படம்
ஏ.என்.எஸ்.பிரசாத் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பாஜக வட சென்னை மக்களவைத் தொகுதி இணை பொறுப்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட உள்ள, ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்களின் விவரங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த நிதிநிலை அறிக்கையிலும் இதே ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதற்கான தடயங்களே இல்லை. இன்று தேர்தலில், திமுகவின் வாக்கு வங்கிக்காக ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் என்று பழைய பல்லவியை புது மெட்டில் பாடி இருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட அரசுகள், வட சென்னை பகுதியை புறக்கணித்தே வந்துள்ளன. தென்சென்னையையும், வட சென்னையையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாலே வட சென்னையை எந்தஅளவுக்கு 'மாற்றாந்தாய்' மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தியிருக்கிறது என்பது தெரிய வரும். வட சென்னையில் பல்வேறுகட்டமைப்புகள் அரைகுறையாகவே உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் மயானங்களின் பராமரிப்புகூட படுமோசமாக உள்ளன.

மக்களை ஏமாற்ற மீண்டும் மீண்டும் வட சென்னை வளர்ச்சி திட்டம் என்று ஏற்கெனவே அறிவித்த திட்டத்தை நிதியை மீண்டும் தேர்தலுக்காக அதே அறிவிப்பை செய்துள்ளனர். இப்படி மக்களை ஏமாற்ற நினைக்காமல், வட சென்னையின் வளர்ச்சிக்கு, அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in