Published : 02 Feb 2018 11:07 AM
Last Updated : 02 Feb 2018 12:33 PM
மத்திய பட்ஜெட் மூலம் மத்திய அரசு விவசாயிகள், கிராமங்களின் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளது என்று நடிகர் கமல் கூறியுள்ளார்.
2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் உரையாற்றுவதற்காக கமல் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்கா புறப்படுவதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்துக்கு வந்த கமலிடம், செய்தியாளர்கள் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எண்ணுகிறீர்களா? என்று கேள்வியை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கமல், "அவ்வாறு கூற முடியாது. நாம் பல காலமாக புறக்கணிக்கப்பட்டுதான் இருக்கிறோம். இருப்பினும் இந்த பட்ஜெட்டில் உள்ள நன்மைகளைப் பார்க்கலாமே.. மத்திய பட்ஜெட் மூலம் மத்திய அரசு விவசாயிகள், கிராமங்களின் பக்கம் பார்வையை திருப்பியுள்ளது. அதிகமாக திருப்பியுள்ளது. ஆனால், நடுத்தரவர்க்கத்தை பொறுத்தவரை இந்த பட்ஜெட் பாராமுகமாக உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!