தமிழை பயன்பாட்டு மொழியாக்க உறுதியேற்போம்: உலக தாய் மொழி தினம் - டிடிவி வாழ்த்து

தினகரன் | கோப்புப் படம்
தினகரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் இன்று (பிப்.21) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மொழிகள் பல இருப்பினும் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கி ஒருவரின் அறிவாற்றலை பெருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் உலக தாய் மொழிகள் தினம் இன்று.

தாய் மொழியாம் தமிழ் மொழியை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவில் கொள்வதோடு, நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.” எனக் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in