Published : 21 Feb 2024 05:38 AM
Last Updated : 21 Feb 2024 05:38 AM

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு 2024-25-ம் ஆண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு @ வேளாண் பட்ஜெட்

சென்னை: சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல்செய்தார். அதில் கூறப்பட்டிருப்ப தாவது:

2024-25-ம் ஆண்டில் தரமானமரக்கன்றுகளை உற்பத்தி செய்தி டவும், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால்களை வலுப்படுத்துவதற்காகவும் சிறிய, பெரிய உயர் தொழில்நுட்ப நாற்றங்கால்கள் அமைப்பதற்கும் வேளாண் காடுகள் திட்டத்தில் ரூ.13 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும். 2024-25-ம் ஆண்டில் 14 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதற்காக, 2024-25-ம்ஆண்டில் ரூ.3 லட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.36 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.60 கோடி மதிப்பில் தேனீ முனையம் உருவாக்கப்படும்.

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு வழங்கிட அனைத்துக் கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2024-25-ம் ஆண்டில் இத்திட்டத் துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முக்கிய பயறு வகைகள்,எண்ணெய் வித்துகளில் பரப்பு விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு ரூ.108 கோடி ஒதுக்கப்படும்.

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தரமான விதைகளைத் தாங்களே உற்பத்தி செய்து, உயர் விளைச்சல் பெறும் நோக்கில், விதைக்கிராமத் திட்டத்தில் 15,810 மெட்ரிக் டன் விதைகள் 50 முதல் 60 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்படும். இதற்கென, 2024-25-ம் ஆண்டில் ரூ.35 கோடி மத்திய, மாநில அரசு நிதியில் ஒதுக்கீடு செய்யப்படும்.

முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறன் உயர்த்துதலை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட, ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ என்றபுதிய திட்டம் 15,280 வருவாய் கிரா மங்களில் செயல்படுத்தப்படும்.

2024-25-ம் ஆண்டில் 100 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் கூடிய ஏதாவது ஒரு வேளாண்சார்ந்த தொழில் தொடங்குவதற்காகப் பட்டதாரிக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்காக, ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பலன் தரும் பருத்தி சாகுபடித் திட்டம் ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 2024-25-ம் ஆண்டில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் மேம்பாட்டுக்காக, ஆலை நிதி யிலிருந்து ரூ.12.40 கோடி செல விடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x