Published : 20 Feb 2024 12:37 PM
Last Updated : 20 Feb 2024 12:37 PM

வேளாண் பட்ஜெட் | 10 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு; ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

சென்னை: “10 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதுதொடர்பான அறிவிப்பில், “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு ஆகியன அதிகரிக்கும். எனவே, நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2024-2025-ம் ஆண்டில் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லிமலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (இராணிப்பேட்டை), ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதி பாகற்காய் (கடலூர்), செஞ்சோளம்(சேலம், கரூர்), திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும்.” இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x