

கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியே 80 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய்பற்றாக்குறை ரூ.49 ஆயிரத்து 278கோடியே 73 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுவே திமுக அரசின் சாதனை.
நிதிநிலை அறிக்கையில்உள்ள இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரியானபாதையில் செல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதி கோவைஉள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்தே கிடைக்கிறது.
ஆனால், கோவை மெட்ரோ ரயில்திட்டத்தை செயல்படுத்த எந்தஉத்தரவாதமான அறிவிப்பும்இல்லை. இது மக்களை ஏமாற்றும்சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு மக்களின் நலன், தொலைநோக்கு எதுவும் இல்லை. இவ்வாறு அதில்தெரிவித்துள்ளார்.