Published : 20 Feb 2024 06:05 AM
Last Updated : 20 Feb 2024 06:05 AM
ஓசூர்: வால்மீகி சமுதாயத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கெலமங்கலத்தில் நடைபெற்ற வால்மீகி ஜனசேன நலச் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கெலமங்கலத்தில் இச் சங்கத்தின் பேரணி மற்றும் மாநாடு நடந்தது. இந்நிகழ்ச்சிகளுக்கு, சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் லகுமா நாயுடு, பொருளாளர் மாதேஷ் நாயக், செய்தி தொடர்பாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் பத்ரி மற்றும் பிரேமானந்தா சுவாமிஜி, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், ‘வால்மீகி ஜெயந்திக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும் வால்மீகி சமுதாய மக்களைப் பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சேர்க்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட கு.ப.கிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தி எந்த வறுமையும் நீங்கிவிடப் போவ தில்லை மாறாக ஒவ்வொரு சாதியிலும் உள்ள அரசு அதிகாரி கள், உயர் பதவி வகிப்பவர்கள், பொருளாதார நிலையை கணக்கெடுக்க வேண்டும்.
எந்த சாதியில் எவ்வளவு ஏழைகள் இருக்கிறார்கள், மற்ற சாதிகளில் எவ்வளவு உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள், அவர்களின் எவ்வளவு பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கிறார்கள், அரசு வேலைகளில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைகள் ஆகியவற்றின் புள்ளி விவரங்களையும் சேர்த்து எடுக்க வேண்டும்.
எந்த சமூகத்தில் இது போன்ற சமநிலை கிடைக்கவில்லையோ அந்த சமூகத்துக்குச் சமநிலை கிடைத்தாக வேண்டும், வால்மீகி சமுதாயம் மற்ற மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். தமிழகத்திலும் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வால்மீகி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வால்மீகி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT