Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM

2,582 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு 2,582 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் (தாள்-1) தேர்ச்சி பெற்ற 31,500 இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 6-ந் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், காலியிடங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை.

இதனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்பட போகிறதோ? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். 4 ஆயிரம் இடங்கள் அளவுக்கு காலியிடங்கள் இருக்கும் என பல்வேறு யூகங்கள் எழுந்து வந்தன.

2,582 காலியிடங்கள் அறிவிப்பு

இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in)

வியாழக்கிழமை இரவு வெளியிட் டது. ஆனால், இதுபற்றிய எந்த விதமான அறிவிப்பும் செய்தி ஊடகங்களுக்கு தெரிவிக் கப்படவில்லை. காலியிடங்கள் விவரம் வருமாறு:-

ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் - 669, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - 64, சிறுபான்மை மொழி - 174, பொதுவான அரசு பள்ளிகள் - 1,675 ஆக மொத்தம் 2,582 இடைநிலை ஆசிரியர் பணி யிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நிரப்பப்பட உள்ளது. வெயிட்டேஜ் மார்க் என்பது பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகிய மதிப்பெண்களின் வெவ்வேறு விகிதாச்சாரத்திலான தொகுப்பு மதிப்பெண் ஆகும்.

தற்போது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் விரைவில் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 2,582 காலியிடங்களுக்கு 31,500 பேர் போட்டிபோடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x