செல்வப்பெருந்தகை சமரசம்: விஜயதரணி மனமாற்றம்

செல்வப்பெருந்தகை சமரசம்: விஜயதரணி மனமாற்றம்
Updated on
1 min read

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சட்டப்பேரவை தலைவர் பதவி கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியை இவரது தாத்தா ஆர்.பொன்னப்ப நாடார் கடந்த 1971-ம் ஆண்டு வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்ற காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, சட்டப்பேரவை கட்சி கொறடாவாக உள்ளார். இவர் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், குறைந்தபட்சம் பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியாவது வேண்டும் என்றும் தலைமையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. வசந்தகுமார் மறைந்த போதே இடைத்தேர்தலில் போட்டியிட விஜயதரணி விரும்பியதாக தெரிகிறது.

தற்போதும் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் விஜய்வசந்த்துக்கே வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுறது. இதையறிந்த விஜயதரணி அதிருப்திக்கு உள்ளாகி, பாஜகவின் கதவை தட்டுவதற்காக டெல்லி சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவரை தொடர்புகொண்ட செல்வப்பெருந்தகை சமாதானப்படுத்தியதாகவும், அதனால் மனமாற்றம் அடைந்து பாஜகவில் இணையும் திட்டத்தை கைவிட்டு இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in