“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையை ஒழித்துவிடுவர்” - அன்பில் மகேஸ்

படம்: ஜெ.மனோகரன்
படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், திமுக சார்பில், மக்களவை தேர்தல் பிரச்சாரக் கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் எடுத்துவரும் நடவடிக்கையால் இந்தியாவில் பாசிசம் சரிந்து வருகிறது. திராவிட மாடல் அரசின் 33 மாதங்களில் 1,339 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிகத்துக்கு எதிரானது திமுக என பரப்ப பாசிசம் முயற்சிக்கிறது. பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் தேர்தல் முறையை ஒழித்து விடுவார்கள்.

சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் என்பதற்காக அல்ல, தொண்டர் என்ற அடிப்படையில், அவருக்கு துணையாக திமுக இருக்கிறது. அச்சத்தை ஏற்படுத்த அமலாக்கத் துறை, வருமான வரித் துறையை மத்திய அரசு ஏவுகிறது. திட்டக் குழு என்பதை கலைத்து நிதி ஆயோக் என்பதை கொண்டு வந்து, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என விவாதிக்காமல் அந்த அமைப்பு முடங்கியுள்ளது’’ என்றார்.

இக்கூட்டத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in