வரி செலுத்த காதில் பூ அணிந்து வந்த மதுரை இளைஞர்!

சங்கர பாண்டியன்
சங்கர பாண்டியன்
Updated on
1 min read

மதுரை: காதில் பூ, கோரிக்கை அச்சிடப்பட்ட பனியன் அணிந்து மதுரை செல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வரிவசூல் மையத்துக்கு நேற்று வரி செலுத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை வரி, வீட்டு வரி, குழாய் வரி செலுத்தக் கூறியும், செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பையும், பாதாள சாக்கடை இணைப்பையும் துண்டிக்கப் போவதாக, மதுரை மாநகராட்சி நிர்வாகம் பொது மக்களை எச்சரித்து வருகிறது. இதை கண்டித்து, செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் சங்கர பாண்டியன் என்பவர், நேற்று பீ.பி.குளம் உழவர் சந்தை எதிரே உள்ள மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்துக்கு வரி செலுத்த வந்திருந்தார்.

அப்போது அவர், நூதன முறையில் தனது காதில் பூ வைத்தும், செல்லூர் பகுதி மக்களை சாக்கடை கழிவு நீரில் இருந்து காப்பாற்று மாறும் அச்சிடப் பட்ட பனியனை அணிந்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்து சங்கர பாண்டியன் கூறுகையில், வரி செலுத்தக் கூறி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி மிரட்டு கிறார்கள். ஆனால், அடிப்படை வசதிகளான பாதாள சாக்கடை சீரமைப்பு, சுகாதாரமான குடிநீர் வழங்கு வதில்லை. அதனால், ஒரு விழிப்புணர்வுக்காக இம்மாதிரி வந்தேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in