Published : 18 Feb 2024 04:00 AM
Last Updated : 18 Feb 2024 04:00 AM

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சென்னையில் தர்ணா

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சென்னையில் தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் துரை பாண்டியன் தொடங்கி வைத்தார்.

போராட்டம் குறித்து முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவீத உயர்வு வழங்குவதாக வாக்குறுதிஅளித்திருந்தது. அதை நடைமுறைப் படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களுக்கான செலவினத்தை அரசே ஏற்க முன் வர வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற கல்லூரி, பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு திருத்திய ஓய்வூதியத்தை 2016-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணக் கட்டணச் சலுகையை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x