

ஈரோடு: டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர் என்றுதமிழக பாஜக விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் விசைத்தறி, கோழிப்பண்ணை, போர்வெல் தொழில் உள்ளிட்டவை நசிந்து வருகின்றன. இவற்றைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 சதவீதம் பணியை 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். பணிகளை விரைவாக முடித்து, திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.நெல் சாகுபடி குறைந்துள்ளதே அரிசி விலை ஏற்றத்துக்கு காரணமாகும்.
மத்திய அரசு அமல்படுத்திஉள்ள வேளாண் சட்டத்தின் 3 பிரிவுகளும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. அதனால் இங்குவிவசாயிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் தூண்டிவிடப்படுகிறது.
நெல் கொள்முதலில் பஞ்சாப் விவசாயிகள் அதிக அளவில் மானியம் பெறுகின்றனர். டெல்லிபோராட்டத்தில் இடைத்தரகர்கள்தான் ஈடுபடுகின்றனர். ஆம்ஆத்மி, காங்கிரஸார் போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.