வருக வருக புது யுகம் படைக்க: ட்விட்டரில் கமல்ஹாசன் அழைப்பு

வருக வருக புது யுகம் படைக்க: ட்விட்டரில் கமல்ஹாசன் அழைப்பு

Published on

மதுரையில், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றி பெயரை தெரிவித்து கொள்கையை விளக்கவிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நாளை (புதன்கிழமை) தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருக்கிறார்.  ராமேசுவரத்தில் இருந்து தனது பயணத்தை அவர் தொடங்குகிறார். மாலையில் மதுரையில் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொடி ஆகியனவற்றை அறிமுகப்படுத்துகிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க" என அவர் அழைப்பு விடுத்துள்ளார். #maiam என்ற ஹேஷ்டேக் கீழ் அதை அவர் பகிர்ந்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in