Published : 08 Feb 2018 10:00 AM
Last Updated : 08 Feb 2018 10:00 AM

அரசு இடத்தில் கோயில்கள் கூடாது என்றால் கோயில்களில் அரசு அலுவலகங்கள் இருக்கலாமா?- எச்.ராஜா

அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால் கோயில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா? என பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு இடத்தில் உள்ள கோவில்கள் இடிக்கப்படும் என்றால் கோவில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா? அரசு இடத்தில், சாலை மத்தியில் உள்ள அனைத்து சிலைகளும் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நேற்று (புதன்கிழமை) தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கோட்டை பாளையத்தம்மன் கோயிலை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள், "தெய்வங்களின் சிலை வைத்து கோயில் எழுப்ப விரும்பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத இடத்தில் கட்டியுள்ள கோயிலை இடிக்க வேண்டும். சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலான கோயில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தே அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், இன்று எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால் கோவில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x