

சென்னை: ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, சென்னை தியாகராய நகரில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புபணியில் சிறப்பாக சேவை ஆற்றியதற்காக, குழந்தைகள் மற்றும்பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர்கோ.
வனிதா, சென்னை வருவாய்கோட்டாட்சியர் ரா.ரெங்கராஜன்,அரியலூர் மாவட்ட தொழிலகபாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநர் பெ.தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவிஆணையர் எல்.திருநந்தன் ஆகியோருக்கு கேடயங்களை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: கடந்த2023 ஏப்ரல் 1 முதல் 2024 ஜனவரி30 வரை கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்ட 188தொழிலாளர்களுக்கு உடனடிநிவாரண தொகையாக ரூ.54.30லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் முறையை நீக்க, தொழிலாளர் துறையுடன் ஒருங்கிணைந்து மற்ற துறைகளின் அமலாக்க அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்றும் முதல்வரின் கனவை நனவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.
சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வி, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் மு.வே.செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.