

பொள்ளாச்சி: மத்திய அரசு நிதிப் பகிர்வில் பாகுபாடு காட்டுவதாக கூறி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பேருந்து நிறுத்தத்தில் திமுகவினர் நேற்று பொது மக்களுக்கு அல்வா வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா, நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், அமித்ஷா, எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் முகமூடி அணிந்து திமுக-வினர் அல்வா தயாரித்து, பொது மக்களுக்கு வழங்கினர்.