மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கிய சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகம்

சிவகங்கையில் இருட்டாக உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில்.
சிவகங்கையில் இருட்டாக உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில்.
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மின்விளக்குகள் எரியாமல் இருட் டாக உள்ளதால் அரசு ஊழியர்கள் வேதனை அடைந்தனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், வனத்துறை பொதுப்பணித் துறை, கருவூலம், முதன்மைக் கல்வி அலுவலர், வணிக வரித்துறை, ஊரக நகரமைப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் பகுதியில் மின்விளக்குகள் எரியவில்லை. அதேபோல் மையத்தில் உள்ள மைதானத்தில் காலை, மாலையில் அரசு ஊழியர்கள் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். மாணவர்கள் விளையாட்டு பயிற்சியும் மேற்கொள்கின்றனர்.

ஆனால் மைதானத்திலும் மின் விளக்குகள் எரியவில்லை. அதே போல் அலுவலகங்களை சுற்றி வரும் சாலையிலும் ஆங்காங்கே மின்விளக்குகள் எரிய வில்லை. இதனால் டார்ச் விளக்கு, மோட்டார் சைக்கிள் வெளிச்சத்தில் அரசு ஊழியர்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் மின்விளக்குகள் எரிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in