ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வருகின்றனர். இவர்களை கைது செய்யாமல், மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்கவைத்துள்ளது. மேலும்,இலங்கைத் தமிழர்களின் பதிவுகுறித்து மத்திய அரசின் முடிவுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது.

மறுவாழ்வு முகாமில்... இந்நிலையில், இலங்கை வவுனியா மாவட்டம் நெடுங்கேணியைச் சேர்ந்த நந்தகுமார்(42), அவரது மனைவி சங்கரி என்ற நித்யா(26), மகள்கள் ஜெசிகா(6), ஜெனுசிகா(3), ஜெபிசிகா(2) ஆகிய 5 பேரும் இலங்கையில் உள்ள தலைமன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையிலிருந்து ஃபைபர் படகில் புறப்பட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகேயுள்ள மணல் தீடை பகுதியில் வந்து இறங்கினர்.

தகவலறிந்த மெரைன் போலீஸார் அங்கு சென்று, இலங்கை தமிழர்கள் 5 பேரையும் மண்டபம்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் 5 பேரும் மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்துக்கு வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 294-ஆகஉயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in