இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 12 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 12 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்
Updated on
1 min read

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஜனவரி 13-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், சிறையில் இருந்த 12 மீனவர்களையும் இல்ஙகை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களுக்கு கரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், அவர்களுக்கு அவசரகால சான்றிதழ் கொடுத்த, இந்திய தூதரக அதிகாரிகள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழக பாஜக மீனவ பிரிவினர் மீனவர்களை வரவேற்றனர். பின்னர், 12 மீனவர்களும் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in