Published : 20 Feb 2018 07:47 AM
Last Updated : 20 Feb 2018 07:47 AM

அரியலூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்: போக்குவரத்து துறை ஆணையராக சமயமூர்த்தி நியமனம்

அரியலூர், கடலூர், தருமபுரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உட்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது கூறப்பட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு (பழைய பதவி அடைப்புக் குறிக்குள் உள்ளது):

எஸ்.மலர்விழி- ஆட்சியர், தருமபுரி (ஆட்சியர் சிவகங்கை), பிரசாந்த் எம்.வாடனேர் - ஆட்சியர் கன்னியாகுமரி (ஆட்சியர், கடலூர்), எம்.விஜயலட்சுமி - ஆட்சியர், அரியலூர் (துணை ஆணையர், சென்னை மாநகராட்சி), வி.பி. தண்டபாணி - ஆட்சியர், கடலூர் (இயக்குநர், மீன்வளத்துறை) மரியம் பல்லவி பால்தேவ் - ஆட்சியர், தேனி (இணை ஆணையர், வணிகவரி), டி.அன்பழகன் - ஆட்சியர், கரூர் (இயக்குநர், ஆவணக்காப்பகம்), ஜி.லட்சுமி பிரியா - இணை ஆணையர், வணிகவரி (ஆட்சியர், அரியலூர்)

என்.வெங்கடாசலம் - இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (ஆட்சியர், தேனி), ஜி.கோவிந்தராஜ் - இணை செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் (ஆட்சியர், கரூர்), டி.விவேகானந்தன்- இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கம் (ஆட்சியர், தருமபுரி), ஆர்.பழனிசாமி- ஆணையர், தொழில்நுட்ப கல்வி (இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கம்), சி.சமயமூர்த்தி - ஆணையர், போக்குவரத்து துறை (சிறப்பு செயலர், பொதுத்துறை -மரபு), என்.சுப்பையன் - இயக்குநர், தோட்டக் கலை (மேலாண் இயக்குநர், தாட்கோ).

டி.மோகன் - துணை செயலாளர், பொதுத்துறை (ஆளுநரின் முன்னாள் துணை செயலர்), ஜெ.மேகநாத ரெட்டி - இணை ஆணையர், நில நிர்வாகம் (சார் ஆட்சியர், மேட்டூர்), தயானந்த் கட்டாரியா - தலைவர், பவர்பின் (ஆணையர், போக்குவரத்து துறை) கே.சீனிவாசன் - மேலாண் இயக்குநர், சிப்காட் (தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம்), சஜ்ஜன்சிங் ஆர்.சவான் - மேலாண் இயக்குநர், தாட்கோ (ஆட்சியர், கன்னியாகுமரி), பி.மதுசூதனன் ரெட்டி - துணை ஆணையர், சென்னை மாநகராட்சி (இணை ஆணையர், நில நிர்வாகத் துறை)

மேலும், சி.சமயமூர்த்தி பொதுத் துறை சிறப்பு செயலர் பதவியையும், கே.சீனிவாசன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவியையும் கூடுதலாக கவனிப் பார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x